கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதியை ஒப்பிடலாமா?.. பிக்பாஸ் ரச்சிதா கூறிய பரபரப்பு தகவல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை அவர் தொகுத்து வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். வரும் அக்டோபர் 6ஆம் தேதி இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கும் நிலையில், கமல்ஹாசனுக்கு இணையாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி இது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:

“நான் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகை. இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர் கமல். அனுபவம், அறிவாற்றல் பெற்றவர் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். அவரிடம் எந்த தலைப்பு குறித்து உரையாடினாலும் பார்வையாளர்களை கவரும் வகையில் பேசுவார். அறிவாற்றலை வெளிப்படுத்துவதில் அவர் ஒரு பிகாசோ.

விஜய் சேதுபதி பழகுவதற்கு இனிமையானவர், பணிவானவர், நேர்மறை குணங்களைக் கொண்டவர். இருந்தாலும், போட்டியாளர்களை கையாள்வதில் கமல்ஹாசனை உடன் ஒப்பிட முடியாது. பார்வையாளர்களை கவர்வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதை மற்றவர்களை போலவே நானும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதியை பார்க்க ஆவலுடன் உள்ளேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.

Read Previous

800 ரூபாய் கொடுத்து காதலனை அடிக்கச் சொன்ன காதலி..!!

Read Next

படித்ததில் பிடித்தது..!! அப்பாவிற்கு அழத் தெரியாது..!! உண்மை தானே?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular