உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் கண்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்..
தினமும் இரவில் படுக்கும் முன் இரண்டு துளிகள் விளக்கெண்ணையை கண்களை சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்வதன் மூலம் கண்கள் பிரகாசமாகவும் பளிச்சென்று இருக்கும், அதேபோல் கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு வாரத்திற்கு ஒரு முறை இரண்டு துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணையை கண்ணில் விட வேண்டும், மேலும் சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கண்களை சுற்றி தடவி வர கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்கும், தினமும் கண் பயிற்சிகளை செய்வதன் மூலம் கண் பார்வை மேம்படும், தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து 10 நிமிடம் அமர கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும், அதேபோல் உருளைக்கிழங்கு துண்டுகளாகி கண்களின் மீது வைத்தாலும் கருவளையம் நீங்கும், மேலும் இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் மேற்கொள்ளும் பொழுது கண்கள் அழகாகவும் பளபளப்பாகவும் பளிச்சென்று இருக்கும்..!!



