குடலில் பாக்டீரியா போன்ற புழுக்கள் இருப்பதால் வயிறு பகுதியில் அடிக்கடி வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அப்படி இருக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு ஓமமே சிறந்த தீர்வாக அமைகிறது..
குடல் பகுதியில் இருக்கும் புழுக்களை அழித்து வெளியேற்றும் திறன் சில வகையான பாக்டீரியாக்களின் அமைப்பை சிதைக்கும் தன்மையும் இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன, சளியை வெளியேற்ற சிறிது ஓமத்தை நீர் இட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருகலாம். ஒரு டீஸ்பூன் ஓமத்தை பொடியாக்கி துணியில் கட்டி அப்பப்பபோது முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு விலகும், மேலும் உணவு எது கழிப்பதால் உண்டாகும் நெஞ்செரிச்சலை குறைக்க மோருடன் ஓமம் பெருங்காயம் இஞ்சி துண்டுகள் சேர்த்து பருகலாம், சிறிது ஓமத்தை வெற்றிலைக்குள் வைத்து மென்று சாப்பிட்டு வர வாய்வு கோளாறுகள் மறையும் வாய்வு பிரச்சனை இருக்கும் போது ஓமத்தை வெற்றிலையில் வைத்து கசக்கி அடி வயிற்று பகுதியில் பற்று போடலாம் மேலும் பசி உணர்வை அதிகரிக்க அரை டீஸ்பூன் ஓமத்தை நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து சிட்டிகை அளவு இந்துப்பு சேர்த்து குடிக்கலாம்..!!



