இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமணமான சில நாட்களிலேயே தங்களது தாம்பத்திய வாழ்க்கையை பிடிக்கவில்லை என்று விவாகரத்து செய்ய முன் வருகின்றனர், அவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அறிவுரை கூறியுள்ளார்..
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சௌமியா அன்புமணி அறிவுரை அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது, சம்சார சங்கீதம் என்ற தலைப்பில் பேசியவர் சம்சாரம் சங்கீதமாக இருக்க அன்பு மட்டும் போதாது மரியாதையும் இருக்க வேண்டும், கணவன் மனைவி பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும் மரியாதை இல்லை எனில் நல்ல சூழல் இருக்காது என்று தெரிவித்துள்ளார், மேலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்றால் அனுசரிப்பு தன்மையோடு விட்டுக் கொடுத்தல் அன்பு காதல் இவை அனைத்தும் இருக்க வேண்டும், இவை அனைத்தும் இருந்தால் குடும்ப வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சௌமியா அன்புமணி ராமதாஸ்..!!




