அனைவரின் வீட்டிலும் கிராம்பு என்பது உணவிற்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இதில் அத்தனை மருத்துவ பயன்கள் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் இந்த கிராம்பில் கார்போஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், கொழுப்பு நார் பொருள், மினரல், ஹைட்ரோ குளோரிக் அமிலம் ,கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிவவ்ளோவின், நயாஸ் இன், வைட்டமின் சி ,மற்றும் வைட்டமின் ஏ போன்றவை உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு அனைத்து நன்மைகள் கிடைக்கிறது. மேலும், குதி வழி காற்றோட்டம் வயிற்றுப் பொருமல் போன்ற பல பிரச்சனைகளுக்கு காம்பு ஒரு சிறந்த மருந்தாகும். இந்த கிராம்பை நாம் தினமும் காலையில் இரண்டு சாப்பிடும் போது நமக்கே தெரியாமல் பல மாற்றங்கள் நமது உடலில் ஏற்படும்.
தினமும் காலையில் இரண்டு கிராம்பு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
1. தினமும் காலையில் இரண்டு கிராம்பு சாப்பிடுவதால் வாயு பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து விலகி ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். கிராம்பு வாயு பிரச்சனைக்கு மிகப்பெரிய ஒரு மருந்தாகும்.
2. மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் கிராம்பு சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கவும் இந்த கிராம்பு உதவுகிறது.
3. நீண்ட நாட்கள் சளி பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த கிராம்பு ஒரு சிறப்பான மருந்தாகும். இந்தக் கிராமை உட்கொள்ளும் போது நீண்ட நாள் சளி மற்றும் அதனால் வரக்கூடிய தொண்டைப்புண் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து இரண்டு வாரங்களிலேயே சரி செய்து நல்ல மாற்றங்களை தருகிறது.
4. மேலும் இந்த கிராம்பு உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது மிக முக்கியமான உண்மை. கிராம்புகளில் உள்ள கூறுகள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக குறைக்க உதவுகிறது இதனால் எடை இழப்பு மிகவும் விரைவாக நடந்து எடை இழப்புக்கு இந்த கிராம்பு வழி வகுக்கிறது.
5. கிராம்பு சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு வரும். இதில் உள்ள நைஜரின் என்ற பொருள் இன்சூரனை அதிகரிக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கிராம்பு மிகவும் உதவுகிறது.




