சாப்பிடும் உணவில் அடிக்கடி முடி தென்பட்டால் இவ்வளவு ஆபத்தா..? ஜோதிடம் சொல்வது என்ன..?

சாப்பிடும் உணவில் அடிக்கடி முடி தென்பட்டால் இவ்வளவு ஆபத்தா..? ஜோதிடம் சொல்வது என்ன..?

நம் அன்றாட வாழ்வில் அனைவரும் வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாளில் மூன்று நேரமும் மனநிம்மதியுடன் அமர்வது உணவை உண்பதற்காக தான். அந்த உணவில் சில சமயங்களில் முடி தென்படும் முடி தென்பட்டால் சமைத்தவருக்கும் சாப்பிடுபவருக்கும் உறவு நீடிக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அந்த வகையில் சாப்பிடும் உணவில் அடிக்கடி தென்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்தால், அது எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஏதோ ஒரு நிகழ்வையோ அல்லது ஏதோ ஒரு பிரச்சனையோ முன்கூட்டியே நமக்கு தெரிவிக்கிறது என்று அர்த்தம். இந்த வகையில் நாம் உண்ணும் உணவில் அடிக்கடி முடி தென்பட்டால் அது சுபமா இல்லையா என்பதை பற்றி பார்க்கலாம்.

இதுகுறித்து ஜோதிடர்கள் இந்து மத சாஸ்திரங்களின்படி சாப்பிடும் உணவில் அடிக்கடி முடி தென்பட்டால் உயிர் சக்திக்கு பிரச்சினையை கொடுக்கலாம் என்றும் அடிக்கடி தென்படும் போது சில தடைகளையும் கொடுத்து உயிர் சக்தியை சீர்குலைக்கும் என்றும் செல்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி உணவில் அடிக்கடி முடி தென்பட்டால் வாழ்க்கையில் எதிர்மறையை குறிக்குமாம். அதாவது எதிர்மறை ஆற்றலை நம் குடும்பத்திற்கு தந்து பல பிரச்சனைகளை உண்டாக்குமாம்.உண்ணும் உணவில் முடி எதார்த்தமாக ஒரு முறை தென்பட்டால் அது தவறில்லை. ஆனால் அடிக்கடி தென்பட்டால் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு ஆளாவோம். ஆகையால் நீங்கள் உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் நேர்மறையாக வைத்து செயல்பட வேண்டும்.

Read Previous

கலப்பட மஞ்சள் கண்டறிவது எப்படி..!!

Read Next

உங்கள் கனவில் குலதெய்வம் வந்தால் என்ன அர்த்தம்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular