திருமண தடை நீங்க..!! இந்த மந்திரம் மட்டும் போதும்..!!

இந்த காலகட்டத்தில் திருமணம் என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சற்று தாமதமாக தான் நடக்கிறது. முக்கியமாக ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பது தான் மிகவும் கடினமாக இருக்கிறது. பெண்களுக்கு மாப்பிள்ளை இருக்கிறார்கள் ஆனால் மாப்பிள்ளைக்கு தான் பெண்கள் இல்லை என்ற காலகட்டத்திற்கு நாம் வந்து விட்டோம். அப்படி மணப்பெண் கிடைத்தாலும் ஏதோ ஒரு விஷயத்தால் திருமணம் தட்டி போகிறது. இது போன்று திருமண தடை இருக்கும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த மந்திரம் மட்டும் போதும்.

விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி திவ்ஷா ஜஷி
பத்னீம் மனோரமாம் தேஹி
மனோவ்ருத்தனு சாரீரம்
தாரீனிம் துர்கஸம்சார
ஸாரசய குலோத்பவாம்
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வ்ஷா ஜஷி

திருமண தடை உள்ள ஆண்கள் தினமும் தங்களுடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து சாமி படத்தை நோக்கி காலை அல்லது மாலை உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை மனதார தனக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று நினைத்து உச்சரிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து 48 நாட்கள் சொல்லி வந்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்காத ஆண்கள், ஒரு ஏழை பெண்ணுக்கு தன்னால் முடிந்த உதவி மற்றும் உணவு தங்களால் முடிந்த புத்தாடை இதை தானமாக வழங்கினால் திருமண தடை நீங்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. மேலும் செவ்வாய் தோஷத்தினால் அவதிப்படும் ஆண்களுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசுவாமி வணங்கி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

Read Previous

அப்பாவின் அன்பான பொய்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular