புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பெருமாள் தான். மேலும் புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக்கூடிய ஒரு அற்புதமான மாதமாகும். இந்த மாதத்தில் பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு விசேஷமான பூஜைகள் செய்வார்கள். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு புரட்டாசி மாதத்தில் உள்ள புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பானது என்று பலருக்கும் தெரியாது. புரட்டாசியில் உள்ள சனிக்கிழமை எவ்வளவு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல்தான் நம் மாதத்தில் உள்ள புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சிறந்த நாளாகும். புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கினால் செல்வ பாக்கியங்கள் கிடைக்கும். எப்படி வழிபட வேண்டும் என்று கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.

புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நெய் வைத்தியம் செய்து மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் விஷேசமானது. நீண்ட கால கடலில் இருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த மகாலட்சுமி வழிபாடு செய்வதால் மிகுந்த பலனை அடைவார்கள். மேலும் லட்சுமி தேவியை வழங்குவதோடு சில விஷயங்களை பின்பற்றினால் நம் வீட்டில் உள்ள துன்பங்கள் விலகி செல்வங்கள் செழிக்கும். புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு கற்பூரம் காட்டி முழு வீட்டிற்கும் கற்பூரம் வாசம் நிறைந்திருக்கும் படி நாம் காட்ட வேண்டும். குறிப்பாக பச்சை கற்பூரத்தை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு நாம் மகாலட்சுமி தேவியை வணங்கி வருவதால் நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகள் உண்டாகி நம் வீட்டில் இன்பமும் செல்வமும் மகிழ்ச்சியும் பொங்கும். மேலும் மகாலட்சுமி தேவிக்கு தேன் கலந்த பாயாசம் செய்து நெய் வைத்தியம் செய்த பிறகு வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு முதலில் சாப்பிட கொடுங்கள். இதன் மூலம் பண பஞ்சம் என்பது வீட்டில் முழுமையாக தீர்ந்து செல்வம் செழிக்கும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யலாம். எறும்புகளுக்கு இணைப்பு பொருட்களை கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலமும் வீட்டில் செல்வம் செழிக்கும்.

Read Previous

காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

Read Next

ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கைக்கு தினமும் ஒரு கைப்பிடி இதை மட்டும் சாப்பிட்டாலே போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular