நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஓடி ஓடி வேலை பார்ப்பது நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்தை சம்பாதிக்க தான். நாம் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்தப் பணத்தை வீட்டின் எந்த திசையில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே பணத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும் வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் கிழக்கு திசையில் கூட வைக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு நாம் பணத்தை வைப்பதால் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், பணத்தை வைக்கும் இடத்தில் லட்சுமி குபேர படத்தை வைத்தால் செல்வம் மேலும் மேலும் பெருகும் என்று கூறப்படுகிறது.
சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்கள் இருக்கையை வடமேற்கு திசையை நோக்கி போட வேண்டும் அவ்வாறு இருந்தால் பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே வகையில் கிழக்கு திசை நோக்கி வாரும் இருக்க இருந்தால் வலது புறத்தில் பணத்தை வைக்கும் இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இதையெல்லாம் நாம் பின்பற்றினால் கண்டிப்பாக பணம் பெருகும் செல்வம் செழிக்கும்.
மேலும் நம் அறையில் 4 மூலைகளில் பணத்தை வைக்கவே கூடாது. குறிப்பாக தென்மேற்கு தென்கிழக்கு வடகிழக்கு போன்ற மூளைகளில் பணத்தை வைத்தால் பணம் பெருகாது. அதனால இந்த இடத்தில் எல்லாம் ஒருபோதும் பணத்தை வைக்காதீர்கள். குறிப்பாக பணம் வைக்கும் இடமானது தெற்கு திசையாக இருந்தால் அதை தவிர்ப்பது மிகவும் நல்லது. வீட்டிற்குள் நுழையும் நபர்களின் கண்களுக்கு நேரடியாக படாத படி பணத்தை வைக்க வேண்டும். மேலும் ஒரு சிலர் பூஜை அறையில் பணத்தை வைத்திருப்பார்கள் இது மிகவும் தவறான முறையாகும். பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.




