உலகம் முழுவதும் தங்க நகைகளை விரும்பாத மனிதர்கள் என்று யாரும் இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களின் தங்க நகைகள் கருப்படைந்து பழமை நிலையில் தெரிகிறதா அவற்றை புதிதாக மாற்றுவதற்கு இந்த வழிமுறைகளை வீட்டில் இருந்தபடியே கையாளலாம்..
பூந்திக்கொட்டையை ஊற வைத்த தண்ணீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு அந்த தண்ணீரில் பழைய தங்க நகையை ஐந்து நிமிடம் ஊற வைத்து பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும் பிறகு காய்ந்த துணியால் அந்த நகைகளை துடைத்தால் தங்க நகை பாலிஷ் போட்டது போல் புதுசாக மாறும் இதனை வீட்டில் இருந்தபடியே நம்மால் செய்ய முடியும் இதற்கு செலவும் இல்லை, அதேபோல் பூந்திக்கொட்டையின் தோலை மட்டும் ஒரு சாக்சுக்குள் வைத்து முடிந்து வாஷிங்மெஷினில் துணி துவைக்கும் போது வாஷிங் பவுடர் ஓடு சேர்த்து போட்டால் துணிகள் பளிச்சிடும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சாக்சுக்கு உள்ளே இருக்கக்கூடிய பூந்திக்கொட்டை தோள்களை மாற்ற வேண்டும் இதனால் துணிகள் பளிச்சிடும் நறுமணமும் வீசிடும்..!!




