காலம் காலமாக ஜாதகத்தை மதித்தும் அதில் உள்ள கிரகணங்களின் குணத்தை நமது குணத்தோடு ஒத்துப் போவதாக ஜோதிட கணிதர்கள் கணித்து கூறுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பிறரிடம் இருந்து மாறுபட்ட சிந்தனை கொண்டிருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது இரக்க சுபாவம் தெளிந்த சிந்தனை கொண்ட நீங்கள் நெருக்கடியான சூழ்நிலையிலும் நிதானத்தையும் நியாயத்தை மட்டுமே பேசுவீர்கள், சாதுக்கியமாக பேசி காரியம் சாதிக்கு ஆற்றல் கொண்டவர்கள் என்று நந்தி வாக்கியம் உங்களை பற்றி பெருமையாக கூறுகிறது இவை உங்கள் குணத்திற்கு மிகவும் பொருந்தக் கூடியதாகவும் நந்தி வாக்கியம் கூறியுள்ளது, மேலும் அனைவருக்கும் உதவக்கூடிய மனப்பான்மையை கொண்டவர்களாக நீங்கள் செயல்படுவீர்கள் பாவம் என்றவர்களுக்கு தனது உணவிலும் பங்கிட்டு மகிழ்ச்சி கொள்பவர் நீங்கள் உங்களது வாழ்க்கை அழகாகவும் செழிப்பாகவும் மாறும், மேலும் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண பாக்கியங்கள் நிகழும்..!!




