ஒரு மனிதனின் உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்றுதான் சிறுநீரகம். பெரும்பாலான மக்கள் சிறுநீரகப் பிரச்சினையால் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக, சிறுநீரகத்தின் கற்கள் போன்ற பிரச்சினைகளால் தான் இந்த காலகட்டத்தில் அதிகமான மக்கள் அவதிப்படுகிறார்கள். சிறுநீரகத்தில் கல் இருப்பதை எவ்வாறு சரி செய்யலாம் உணவு ரீதியாக என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை உணவு முறையை பின்பற்றி நாம் கரைத்து விட முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் சிறுநீரகத்தில் உள்ள கற்களை சில வகையான ஜூஸ்கள் குடிப்பதன் மூலம் முற்றிலுமாக சரி செய்யலாம். சிறுநீரக கற்களை போக்க மாதுளம் வளர் மற்றும் துளசி சாறு எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள சிட்ரஸ் கற்களை விரைவாக கரைக்க உதவுகிறது. சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை எளிமையாக கரைக்க இது உதவுகிறது. மேலும் வாழைத்தண்டு சிறுநீரகப் பிரச்சனைக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாழைத்தண்டு ஜூஸ் மற்றும் அதில் உள்ள தண்ணீர் இந்த பிரச்சனைக்கு மிகச்சிறந்த தீர்வாகும். குறிப்பாக, இந்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகமான அளவு நீரை உட்கொள்ள வேண்டும். சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்தாலே போதும் இந்த பிரச்சனையில் இருந்து நாம் முற்றிலுமாக வெளியேறலாம்.




