தொலைவில் இருக்கும் பொருள் மங்கலாகவும் அருகில் இருக்கும் பொருள் பளிச்சென்றும் தெரிவதை கிட்டப்பார்வை அல்லது மயோபியா என்று கூறுவோம். இந்த வகை கண் குறைபாடு கணினியின் முன் அதிக நேரம் அமர்ந்திருப்பது, இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பது, உடலில் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படுகிறது. இந்த பதிவில் இந்த குறைபாட்டை வீட்டில் இருந்தபடியே எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
ஆயுர்வேதத்தின் படி, இந்த வகை கண் குறைபாடு உடலில் இருக்கும் பித்தம் நிலையற்ற போது ஏற்படும் என்று குறிப்பு உள்ளது. இதற்கு கீரை வகைகள், கேரட், நெல்லிக்காய், முட்டை வைட்டமின் சி, வைட்டமின் ஈ உணவுகள் மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது மூலம் இந்த கிட்டப்பார்வை குறைபாட்டை சரி செய்ய முடியும். இதேபோல் நாட்டு மருந்து கடையில் விற்கும் திரிபலா சூரணத்தை மருத்துவரின் ஆலோசனையின் படி தினமும் பயன்படுத்தி வர கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், அதிகமாக சர்க்கரை உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதும் கிட்டப்பார்வை குறைபாட்டிற்கு காரணமாகும். இதனால் இவ்வாறு உண்ணும் உணவுகளை உடனடியாக நிறுத்துவது நல்லது.




