ஹரியானா சட்டமன்ற தேர்தல்..!! வினேஷ் போகத் முன்னிலை..!!

ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய  நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை எண்ணும் பணிகள் இன்று (அக்டோபர் 8) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி அரை மணி நேரம் ஆகிய நிலையில் (8.30 நிலவரப்படி) மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெவெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் தொண்டர்கள் என அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட பிரபல மல்யுத்த வீராங்கனையான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினேஷ் போகத் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தபால் வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே அவர் முன்னிலை வகித்து வருகிறார்.

Read Previous

வைரலாகும் நடிகை அனு இமானுவேல்-ன் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்..!!

Read Next

அதிர்ச்சி சம்பவம்..!! தூங்கிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular