நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள்..!!
இந்த நவீன காலகட்டத்தில் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் பல நோய்களால் அவதிப்படுகிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று பார்த்தால் அது நாம் பின்பற்றும் உணவு முறைதான். உணவு முறையும் நோய்கள் வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. சத்தான உணவு முறையை இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பின்பற்றுகிறார்களா? என்று கேட்டால் அது கேள்வி குறிதான். என் நிலையில் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானருக்கு இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மேலும் இந்த நீரிழிவு நோய் வந்தாலே உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகளை இது ஏற்படுத்தும். இதனால் நாம் உணவுடன் கட்டுப்பாட்டுடன் இருந்து சத்தான காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட வேண்டும். இவ்வாறு நான் கட்டுப்பாட்டுடன் பழங்களை சாப்பிடுவதால் இந்த நோயிலிருந்து ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்று தற்போது பார்க்கலாம்.
அவகேடோ சாப்பிடுவதால் இதில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைத்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இந்த பழம் மிகவும் உதவுகிறது. மேலும், கிவி மற்றும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க இந்த பழமும் உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் பெரி மற்றும் சிட்ரஸ் நிறைந்த பழங்களை எல்லாம் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். இவ்வாறு பழங்களை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.




