தமிழக முழுவதும் samsung தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர், ஊதிய உயர்வு போனஸ் மற்றும் ஊழியர்களுக்கான திட்டங்கள் என பலவற்றிற்கு எதிராக சாம்சங் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்ற வேளையில் காவல்துறையினர் சாம்சங் ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..
காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் சாம்சன் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிற்சங்கம் அமைக்க வேண்டியும் போராட்டம் நடைபெறுகிறது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர் காவல்துறையின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார், இதனைத் தொடர்ந்து காவல்துறை சாம்சங் ஊழியர்களை அடித்து துன்புறுத்துவதாக தகவல் வெளிவருகிறது..!!




