கேம் விளையாடியதன் மூலம் பள்ளி மாணவன் தற்கொலை சென்னையில் பரபரப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தை பருவத்தினர் அனைவரும் மொபைல் போனில் வீடியோ கோம்களை அதிகம் விளையாடிக் கொண்டு வருகின்றனர் இதனால் பல நேரங்களில் குழந்தைகளின் உயிரை பறித்து விடுகிறது வீடியோ கேம்..

தொடர்ந்து தமிழகத்தில் வீடியோகம் விளையாடும் குழந்தைகள் மரணித்து வருகின்ற நிலையில் தற்பொழுது சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் நதியா கணவரை இழந்த இவர் மகன் நவீன் 15 மகள் பிரியதர்ஷினி 13 ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். பத்தாம் வகுப்பு படித்து வந்த நவீன் எந்நேரமும் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதால் அவரை நதியா கண்டித்துள்ளார், இதனால் மனமுடைந்த நவின் நேற்று அக்டோபர் 8 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது, இதனைத் தொடர்ந்து பெரம்பூரை சேர்ந்த காவல்துறையினர் குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குழந்தைகளை ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சண்டை போடுவது அன்பு காட்டுவது என்று இயல்பு நிலையை காட்டி வளர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர், குழந்தைகள் தவறு செய்யும் பொழுது பெற்றோர்கள் திடீரென கோபப்படும் பொழுது குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் தங்களை மரணத்தின் வழியில் இழுத்துச் செல்கின்றனர் என்று அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்..!!

Read Previous

இரத்தத்தை சுத்தகரிக்கும் ஆறு முக்கிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

Read Next

சென்னை மக்கள் அதிர்ச்சி : சென்னையை மிரட்டும் ரூட்டு தல என்பவர் யார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular