நாம் பலரும் விரும்பி உடுத்தும் துணிகள் சீக்கிரமாகவே சாயம் போய்விடும். இதனால் அந்த துணிகளை உபயோகிக்க முடியாமல் கீழே போட்டு விடுவோம். தற்போது இந்தப் பதிவில் துணிகளுக்கு ஈஸியான முறையில் எப்படி சாயம் போடுவது என்று கீழே விரிவாக காண்போம்.
அதாவது, சூப்பர் மார்க்கெட் அல்லது ஸ்டோர் கடைகளில் கிடைக்கும் சாய பொடியை நமது விருப்பத்திற்கேற்ற கலரில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சாயம் போட வேண்டிய ஒரு துணியை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, அடுப்பை பற்ற வைத்து ஒரு பெரிய அளவு இரும்பு சட்டியில் தண்ணீரை எடுத்து அதில் கல் உப்பு கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு கொதிக்கின்ற நீரில் வாங்கி வைத்த சாய பொடியை கலந்து நன்றாக கொதித்த பின் இறக்கி வைக்க வேண்டும். இதன் பின் சாயம் போட வேண்டிய துணியை அந்த நீரில் போட்டுவிட்டு கரண்டி அல்லது குச்சியை வைத்து துணி முழுவதும் நீரில் மூழ்குமாறு செய்ய வேண்டும். இந்த தண்ணீர் ஆறிய பிறகு துணியை எடுத்து பிழிந்து வெயில் படாமல் வீட்டிற்குள் பேன் காற்றில் காய் விட்டவுடன் உங்க டிரஸ் ரெடி.




