பெண்களே சமையலறைக்குள் நுழையும்போது இந்த சமையல் குறிப்புகளை எல்லாம் கண்டிப்பாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..!!

பெண்களே சமையலறைக்குள் நுழையும்போது இந்த சமையல் குறிப்புகளை எல்லாம் கண்டிப்பாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..!!

வீட்டு சமையலறையில் சமைக்கும் பெண்களுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1.ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி மற்றும் புழுக்கள் வராமல் இருக்க கொஞ்சம் வசம்பை தட்டி போட்டால் பூச்சி புழுக்கள் வராது.

2. தயிர் நீண்ட நேரம் குளிக்காமல் இருக்க இஞ்சி கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
3. காய்ந்த மிளகாயை வறுக்கும்போது அதில் அதிகமான நெடி வரும் அது வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
4. கோதுமை மாவு அரைக்கும் பொழுது அதனுடன் சோயாபீன்ஸ் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
5. பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமக்கு போகாமல் புஸ் புஸ் என்று சூப்பராக இருக்கும்.
6. கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால் கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை நாம் தவிர்க்கலாம்.
7. தோசை கல்லில் தோசை வராமல் இருந்தால் சிறிது புளியை ஒரு துணியில் கட்டி அதை எண்ணெயில் தொட்டு கல்லில் நன்றாக தேய்த்து விட்டு தோசை சுட்டால் தோசை சூப்பராக வரும்.
பெண்களே இந்த குறிப்புகளை எல்லாம் உங்கள் சமையலறையில் பயன்படுத்துங்கள்.

Read Previous

Bank Of Maharashtra-வில் 600 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலை..!! உடனே அப்ளை செய்யவும்..!!

Read Next

செவ்வாய்க்கிழமையில் மறந்தும் கூட இதையெல்லாம் வாங்கி விடாதீர்கள்..!! ஆன்மீகம் சொல்வது என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular