சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அறிமுகமான துஷாரா விஜயன், அதை தொடர்ந்து பல முக்கிய படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே பேசப்பட்டது. மேலும், இவர் கடந்த ஆண்டு அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து அநீதி திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் சமீபத்தில் எனக்கும் லவ் இருக்கு என்று கூறியது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.
அதாவது துஷாரா விஜயன், “லவ் எனக்கும் அடிக்கடி வரும், ரீசன்ட்டா கூட எனக்கொரு லவ் வந்துருக்கு” என்று சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், அர்ஜுன் தாஸ் சில நாட்களுக்கு முன் போட்ட இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டு இருந்தவாறு மறைமுகமான போட்டோவை பதிவு செய்திருந்தார். இதனால் துஷாரா விஜயன் தான் அந்த பெண் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.




