VIDEO: மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்..!! வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கும் மாணவன்..!!

VIDEO: மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்..!! வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கும் மாணவன்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குடேம் மாவட்டத்தில் மானச விகாசா என்ற பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவனை கொடூரமாக அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அந்த மாணவனை ஆசிரியர் முதுகில் கொடூரமாக அடிக்கிறார். வலி தாங்க முடியாமல் அந்த மாணவன் அலறுகிறார். ஆனால் இரக்கமில்லாமல் அந்த ஆசிரியர் மீண்டும் கொடூரமாக அடிக்கிறார். பின்னர் அந்த ஆசிரியரின் தாக்குதலால் மீள முடியாத சிறுவன் அழுது கொண்டே தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறினான்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் அந்த பள்ளியின் முன்பு தனது உறவினர்களுடன் வந்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர் விசாரணையில் பள்ளியின் சிசிடிவி கேமராவை பார்த்தபோது அந்த விடியோவை பார்த்து மாணவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

Read Previous

தெய்வத்திடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வழிபட்டு பாருங்கள்..!! நீங்கள் கேட்கும் அனைத்தும் கிடைக்கும்..!!

Read Next

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular