பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவரானார்… அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்… படித்ததில் பிடித்தது..!!

 

உலகில் எல்லாப் பொருளும் வளர வளர தரமாகும்
காய் முதிந்தால் கனியாகும்
இந்த அலங்கோல மனிதன் மட்டும்
பிள்ளைகளாய் இருந்து வளர்ந்து பெரியவராயும்
ஏன் தான் பேயானர்கள்

அவர் கோபத்தால் அவசரமாய் பிறந்த ஆத்திரத்தால் சிறியவரானார்
செருக்குற்றார் சிறுமைப்பட்டார் சினமுற்றார் சீரழிந்தார்

இது ஏன்?
மனிதரின் உள்ளத்துள்ளே உறங்குவது மிருகம்
கறுப்பு நாயின் கரிய நிறம் போல
அவனுடன் உடன் பிறந்தே ஒட்டிக்கொண்டிருக்கிறது மூர்க்கம்
கூர்மையில்லாதிருந்த போதும்
குத்திக்கிழித்து உதிரம் வடிக்க செய்யும் ஆயுதம்
நாக்கைப் போல உலகில் வேறு ஒன்றும் இல்லை

நொந்தவர் மனம் சுட நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும்
நம்மை நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும்

நமது கோபம்,சீறுகின்ற சினம்,ஆறாத ஆத்திரம்,மாறத வெருப்பு
நமது உதிரத்தில் உலை மூட்டி கொதிக்க வைக்கும்
சூடான ரத்தத்தால் சுருங்கிப் போவது நமது உடலுறுப்புக்கள்

காமத்தால் இறந்தவர் கணக்கில்லாதவர் ஆனால்
கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே என்பார்

கோபம் நமது உடலை மட்டுமல்ல,
உள்ளத்தை மட்டுமல்ல
உயர்வையும் சிதைக்கிறது.

நாம் கோபப்படுவதால்
மற்றவர் மதிப்பையும் மரியாதையும் இழக்கிறோம்

ஆத்திரப்படுவதால் அன்மையும் பாசத்தையும் இழக்கிறோம்

பல திட்டங்கள் ஒரு நொடி சினத்தால் உதிர்ந்து போனதுண்டு

மாறாத காதல் கூட ஆறாத கோபத்தால் அழிந்து போனதுண்டு

ஆறாத சினமுடையவனை அறிவில்லாதான் என்பார்பெரியோர்

நாம் வெல்வது வேண்டுமானால்
வெகுளியை விட்டு விட வேண்டும்

பாம்பு அழுக்கு தோலை
நீக்குவது போல
நமது அழுக்கான ஆத்திரத்தை கழற்றி விடுவோம்

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியை என்பார்

நமது சிடுசிடுப்பும் கடுகடுப்பும்,படபடப்பும்
பிறரால் உருவானது என்று நாம் நம்புகிறோம்

இதுஉண்மையல்ல
நமது அவசரமும்,ஆத்திரமும் நமது அச்சத்தால் தான்,ஆற்றமையால் தான்

நமது பலகீனமும்
நமது வலிமையின்மையுமே

நமது சினமானது

கோபமே
நரகத்தின் வாசல்
கோபத்தை விட்டால் துயரமே இல்லை

கோபத்தை விட பெரிய நோயும் இல்லை
நமது நாவை நம்மால் அடக்க முடியாது போனால்
பிறகு யாரை நாம் அடக்குவோம்?

பெருமை என்பது பெரியவராய் ஆனதில் இல்லை

அருமை என்பது ஆற்றல் உடையவராய் வளர்ந்ததில் இல்லை

சிறுமை என்பதும் நமது வயதினால் வளத்தினால் இல்லை

சீறுகின்ற சிங்கமெனும் சினம் அடக்கி
மீறுகின்ற நெருப்பெனும் கோபம் தனிந்தால்
மனிதம் புனிதமாகும்.

Read Previous

உடலுறவு கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

Read Next

வானிலை அறிக்கை.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular