ஹோட்டல்களில் தருவதுபோல சிவப்பாக, மொறுமொறுப்பாக தோசை செய்வது எப்படி ?

தோசை என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவாகும். சிலர் தோசையை மொறுமொறுப்பாக சாப்பிட விரும்புவார்கள். சிலருக்கு கல் தோசை போன்று மொத்தமாக சாப்பிட தான் பிடிக்கும். ஆனால் அனைவருக்குமே ஹோட்டலில் தரும் அந்த தோசை எப்படி செய்கிறார்கள் என்ற எண்ணம் உண்டு. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இட்லி அரிசி ஐந்து பங்கு, உளுந்து ஒரு பங்கு, கால் டீஸ்பூன் வெந்தயம் என்ற அளவில் கலந்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு கிலோ அரிசிக்கு ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மைதா மாவு, சிறிதளவு சர்க்கரை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தோசை வார்த்தால், ஓரத்தில் வெளிர் நிறத்திலும் நடுப்பகுதியில் பொன் நிறத்திலுமாக மொறுமொறுவென ஹோட்டல் தோசை போலவே கிடைக்கும்.

Read Previous

வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு..!! மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular