எந்தெந்த விளக்குகளில் விளக்கு ஏற்றினால் என்னென்ன பலன்கள் உண்டாகும்..!!

குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்..

🌟 ஒரு முகம் – மத்திமம்

 

🌟 இருமுகம் – கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்

 

🌟 மூன்று முகம் – குடும்ப விருத்தி உண்டாகும்

 

🌟 நான்கு முகம் – மனை மற்றும் கால்நடை லாபம் உண்டாகும்

 

🌟 ஐந்து முகம் – சகல சௌபாக்கியம் உண்டாகும்

 

காமாட்சி விளக்கு :

 

🌟 காமாட்சி விளக்கு, எல்லோரின் வீட்டில் இருக்கக்கூடிய விளக்கு ஆகும். புதுமண பெண்ணுக்கு தாயார் வீட்டு சீதனமாக இரண்டு குத்து விளக்கும், ஒரு காமாட்சி விளக்கும் கொடுப்பது தமிழர் தங்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சுபப் பொருட்களில் ஒன்றாக காமாட்சி விளக்கு கருதப்படுகிறது.

 

பாவை விளக்கு :

 

🌟 பாவை என்பது பெண்ணை குறிக்கிறது. அதாவது இறைவனின் திருவுருவங்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் விளக்கை ஏந்தி ஒளி கொடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கும்.

 

மாவிளக்கு :

 

🌟 புரட்டாசி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளுக்கு போடப்படும் விளக்கு. புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமையும் போடப்படுவது சிறப்பாகும்.

Read Previous

மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு..!! மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு..!!

Read Next

உலகின் ஆகச்சிறந்த தற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்..!! படித்ததில் ரசித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular