பெண்களை புரியாத புதிர் என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு..!! கட்டாயம் படிங்கள்..!!

புரியாத புதிர் பெண்..

அவர்களால் சில மீளவே முடியாத இன்னல்களிலிருந்து ஒரே நாளில் உறுத்தலின்றி வெளியேறி இன்னொரு உலகத்திற்கு சென்று வரவும் முடியும்..
அதிலியே புழுங்கி வெந்து தணிந்து வேறு இடத்தில் செல்லாமல் அங்கேயே செத்தொழியவும் முடியும்..

அவர்களால் தன்மானத் திமிரில் எவரையும் சாராமல் தன்னை மட்டுமே நம்பி சுயசிந்தனை உடைய பெண்ணாகவும் வாழ முடியும்..
எல்லாவற்றுக்கும் அடங்கி அத்தனைக்கும் தலையை ஆட்டும் அடங்கியப் பெண்ணாகவும் சிறப்பாக வாழ முடியும்..

அவர்களுக்கு கண்ணீர் சிந்தாமல் அழும் வித்தையும் தெரியும்.
ஊர் அறிய கத்திக் கதறி அழுது அனைத்துப் பார்வையும் தன் மீது விழ வைக்கும் சூட்சமும் தெரியும்…

எல்லா சோகத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ள முடியாமல் அனைவரின் ஆறுதலுக்காக ஏங்குபவளும் அவள் தான்..

துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல் துயருற்ற போதிலும் போராட்டக் குணத்தை இழக்காமல்
தனக்குத் தானே ஆற்றிக் கொள்பவளும் அவள் தான்…

இதுவும் கடந்து போகும் என உணர்த்தியவளும் அவள் தான்.
எதுவும் மறந்து போகாது என
அனத்தியவளும் அவள் தான்.

அடுத்தவரின் பிரச்சனைகளுக்கு
உடனடியாகத் தீர்வு சொல்பவளும் அவள் தான்..

தலைவலியைப் பிரளயம் போலவும் உயிரே போகும் வலியை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் இந்தப் பெண்களால் மட்டுமே சாத்தியம்.

ஆம் அவர்கள் புரியாத புதிர் தான்…

 

Read Previous

“ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் ” என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது..? விவாகரத்து பற்றிய உங்கள் கருத்து என்ன..??

Read Next

சாமி படங்களுக்கு வாசனையில்லாத பூக்களை ஒருபொழுதும் வைத்து விடாதீர்கள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular