கங்குவா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் கேரளாவில் உள்ள வீட்டில் இன்று (அக். 30) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். நிஷாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, “நிஷாத் மறைந்து விட்டார் என்பதை கேட்ட போது மனம் வேதனையடைந்தது. கங்குவா படக்குழுவில் முக்கியமான நபராக நீங்கள் எப்போதும் நினைவுகூரப்படுவீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
Heartbroken to hear Nishadh is no more! You’ll always be remembered as a quiet and important person of team Kanguva.. In our thoughts and prayers..! My heartfelt condolences to Nishadh’s family & friends. RIP pic.twitter.com/ClAI024sUe
— Suriya Sivakumar (@Suriya_offl) October 30, 2024




