கந்த சஷ்டி விரதம் பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள இந்தப் பதிவை படியுங்கள்..!!
கந்த சஷ்டி விரதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது முருகன் தான். முருகனுக்கு கந்த சஷ்டி விரதம் இருப்பது நல்ல பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கந்த சஷ்டி விரதம் பற்றிய விபரங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி என்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். என்னாலே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.
இந் நிகழ்வு திருச்செந்தூர் தளத்தில் நடந்தது, எனவே கந்தசஷ்டி விழா இத்தளத்தில் வெகு விம்மரிசையாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான நினைத்து மேற்கொள்ளும் விரதங்களில் கந்தசஷ்டி விரதமும் முதன்மையானது. நம் மனதில் நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் நல்ல பயன்கள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கந்த சஷ்டி விரதத்தின் பலன்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்:
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் முருகர் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று வேண்டிய அனைத்தும் நிச்சயம் கைகூடும். மேலும் கந்தசஷ்டி விரதம் இருப்பதால் நிம்மதியும், சந்தோஷமும் நம் வாழ்வில் நிறையும்.




