நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் இதையெல்லாம் பண்ண கூடாது இதையெல்லாம் பண்ண கூடாது என்று ஒரு சில கோட்பாடுகள் மற்றும் ஒரு சில அறிவுரைகளை வீட்டில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக இளையவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு கூறுவார்கள். இதற்கு எல்லாம் ஒரு காரணம் கண்டிப்பாக உண்டு என்பது அறிவுரை கூறுபவர்களுக்கு தெரியும் ஆனால் அந்த அறிவுரையை எடுத்துக் கொள்ளாமல் அப்படி என்னதான் ஆகிறது என்று மீண்டும் மீண்டும் வீட்டில் உள்ள சிறியவர்கள் அதையே செய்வார்கள். அந்த வகையில் ஒரு சிலவற்றை பெரியவர்கள் கூறியதற்கு ஒரு சில காரணங்கள் உண்டு. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அருகில் எங்காவது இடி இறங்கினால் அர்ஜுனா, அர்ஜுனா என்று சத்தமாக சொல்ல வேண்டும் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள் அதற்கு என்ன காரணம் என்று தெரியுமா..?
இடிச்சத்தின் காரணமாக சிலருக்கு காது அடைத்துக் கொள்ளும். அதை சரி செய்ய, தாடையை சுருக்கி விரிக்க வேண்டும். அதற்கு அர்ஜுனா என்று சொல்லும்போது அது எளிதாக நடந்தேறி விடும். இதற்காகத்தான் பெரியவர்கள் இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள்.
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா..?
பூமியின் காந்த சக்தியானது வட துருவத்தை நோக்கி நிற்கிறது. வட திசையில் தலை வைத்து படுக்கும் போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையும் தாக்குகிறது அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இது.
உச்சி வேலையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது ஏன் தெரியுமா..?
கிணற்றுக்குள் பல்வேறு விஷ வாயுக்கள் உற்பத்தியாகும். உச்சி வெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி வேலை பரவும். இதனால் உச்சி விலையில் பிணத்தை எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கும். அதனால்தான் உச்சிவேலையில் கிணத்தை எட்டிப் பார்க்க கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.




