தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பது நியாயமா என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்த்தாயை புறக்கணிப்பது நியாயமா தமிழக முதல்வர் அண்ணன் மு க ஸ்டாலின் அவர்களே அரசு விழாவில் தவறாமல் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்து பாடலில் பாடியவர்களின் குறையில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள் நீங்கள் உங்கள் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே இந்த குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும், குறையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டுமே தவிர தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையே தவிர்ப்பது நியாயமா பாடியதில் குறைக்கண்ட நீங்கள் பாடாமல் விடுவதை குறை என்று எண்ணவில்லையா குறையோடு பாடுவது அநீதி அதற்காக பாடாமல் இருப்பது நீதியா என்ற கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழகத்தில் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்க்கை பாட வேண்டும் என்பதே நாம் தமிழுக்கு தரும் மதிப்பாகும் என்று கூறியுள்ளார்..!!




