பட்டாசு சாலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்..
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக விருதுநகருக்கு வருகை தந்துள்ளார் இதற்காக சென்னையில் இருந்து காலையில் விமானத்தில் புறப்பட்ட 10:30 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் வந்தடைந்தார் அங்கிருந்து காரில் விருதுநகர் புறப்பட்ட முதல் அமைச்சருக்கு பகல் 1 மணி அளவில் சந்திர ரெட்டியபட்டி பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் 60 ஆயிரம் பேர் திரண்டு திமுக கொடியுடன் முதலமைச்சர் வரவேற்றனர், இதை அடுத்து சிவகாசி அருகே கன்னிச்சேரிபுதூருக்கு சென்ற முதல்வர் அங்குள்ள பட்டாசு ஆளையை பார்வையிட்டு பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர் அப்போது பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டிருந்தார் தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்களை சந்திக்கும் முதலமைச்சர் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ரூபாய் 77 கோடியில் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார், இதையடுத்து விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நலத்தட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற 35 ஆயிரம் பேருக்கு அரசின் பல்வேறு துறைகளில் நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்..!!!




