சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய மருத்துவ பயன்கள்..!! முடி பிரச்சனை முதல் மூலம் வரை..!!!

முடி வளர்ச்சி முதல் மூலம் வரை… இத்தகைய நோய்களை அடித்து விரட்டும் சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய மருத்துவ பயன்கள்..!!

 

நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் காலையில் வயலில் வேலை பார்த்து இருக்கும் நபர்களுக்கு பழைய சோறும் கூழ் மற்றும் அதோடு சின்ன வெங்காயமும் சேர்த்து சாப்பிடுவார்கள். குறிப்பாக பழைய சோறும், சின்ன வெங்காயமும் நல்ல காம்பினேஷன் ஆகும். சின்ன வெங்காயத்தில் மருத்துவ பயன்கள் உள்ளது என்பதை நம் முன்னோர்கள் அந்த காலகட்டத்தில் இருந்து அறிந்து அதனை சாப்பிட்டும் வந்திருக்கிறார்கள். இந்நிலையை சின்ன வெங்காயம் ஏகப்பட்ட நோய்களுக்கு ஒரு தீர்வாக அமைகிறது.

சின்ன வெங்காயம் அதிகமாக உணவில் உட்கொள்வது மிகவும் பலனைத் தரும். அந்த வகையில், மூல நோய்களால் கடுமையாக அவதிப்படுபவர்களுக்கு 50 கிராம் சின்ன வெங்காயத்தை இடித்து அதன் சாறெடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு நாளில் இரண்டு வேளையும் தொடர்ந்து 20 நாட்களுக்கு குடித்து வந்தால் ரத்தம் மூலம் குணமாகும். நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் சின்ன வெங்காயம் சாப்பிடும் மூலம் வெளியேறி நுரையீரல் மிகவும் ஆரோக்கியத்துடன் செயல்படும். மேலும் இந்த சின்ன வெங்காயத்தை நெஞ்சு வலி பிரச்சனை இருப்பவர்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தம் உறையும். இதய நோய் உள்ளவர்களுக்கு இந்த சின்ன வெங்காயம் மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது. சிலர் சின்ன வெங்காயத்தை சாப்பிட மறுப்பார்கள். ஏனென்றால், சின்ன வெங்காயம் சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் வீசும். இதனால் பல பேர் இந்த சின்ன வெங்காயத்தை சாப்பிட முற்றிலுமாக மறுப்பார்கள். ஆனால், இதில் இருக்கக்கூடிய மருத்துவ குணத்தை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைப்பதற்கு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாக கிடைத்து உடல் எடையை குறைக்க வழிவகுக்கும். வெறும் சின்ன வெங்காயத்தில் உள்ள சாறு உடலில் உள்ள கொழுப்பை உடனே கரைக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக புற்றுநோய்க்கு எதிர்ப்பு பண்புகள் இந்த சின்ன வெங்காயத்தில் தான் அதிகமாக உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். இந்த சின்ன வெங்காயம் சாப்பிடுவது மூலம் ரத்த சோகை பிரச்சினைகளில் இருந்து நாம் தப்பிக்கலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த சின்ன வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணையில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலுமாக தீரும்.

Read Previous

மரணம் வரை மனைவி என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணம்..!! கணவன்மார்களே கட்டாயமாக படிங்க..!!

Read Next

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள்.. கண்டிப்பாக இதை எல்லாம் பின்பற்ற வேண்டும்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular