சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் கிரிதரன் இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளது…
இவரது வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால் சென்னை திநகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டு வீட்டிற்கு எலி மருந்து அடிக்க ஆன்லைன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார், அதன்படி புதன்கிழமை இரவு வீட்டிற்கு வந்த நிறுவன ஊழியர்கள் எலி மருந்து அடித்து விட்டு சென்றுள்ளனர், அளவு தெரியாமல் அதிக அளவில் மருந்து அடிக்கப்பட்டதால் நெடி அதிகமாக இருந்துள்ளது, சில மணி நேரங்களுக்கு பிறகு சற்று நெடி குறைந்ததும் வீட்டுக்குள் சென்று அனைவரும் படுத்து வீட்டு ஜன்னல்களை மூடி வைத்து வீட்டு ஏசியை போட்டு குடும்பத்தினர் அனைவரும் உறங்கி உள்ளனர், மறுநாள் காலை கணவனும் மனைவியும் மூச்சுத் திணறுடன் எழுந்துள்ளனர், குழந்தைகளை எழுப்பிய போது இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர் அவர்கள் படுக்கிலேயே வாந்தி எடுத்துடன் மூச்சு திணறலும் இருந்துள்ளது, உடனே தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்த கிரிதரன் தானே காரை எடுத்துக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் இறந்து விட்டதாக கூறியதால் கதறி அழுதனர் இதை அடுத்து கணவன் மனைவி இருவரையும் மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா பன்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், கிரிதரன் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார், அண்மையில் அவரது அலுவலகத்தில் எலி தொல்லை அதிகமானதால் தி.நகரை சேர்ந்த யூனிக் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் மருந்து அடித்து விட்டுச் சென்றுள்ளனர், அதில் எலி தொல்லை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதால் அதே நிறுவனத்தை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு எலி மருந்து அடிக்குமாறு அழைத்துள்ளார், கிரிதரன் ஆனால் மருந்தின் அளவு அதிகமானதாலோ அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலோ இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது…!!




