விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் வரும் 29ஆம் தேதி சீனாவில் வெளியாகியுள்ளது….
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகாராஜா திரைப்படம், விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவானது, குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கி இருக்கிறார், இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர், இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா, மோகன் தாஸ், நட்டி முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்தனர், இந்த படத்துக்கு அஜினீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார், கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் கோடியில் வசூல் அளித்தது, இப்படம் ஓடிடியில் வெளி வந்தும் நல்ல வரவேற்பை பெற்று netflix தளத்தில் இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களிலேயே அதிகம் பார்வையாளர்கள் கனத்தை ஈர்த்த படங்களில் மகாராஜா 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது, இதற்கிடையே மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாகவும் நடிகர் அமீர்கான் அதில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியானது, இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகின்ற 29ஆம் தேதி வெளியிட உள்ளனர் இந்த படத்தை அலிபாபா குழுமம் வெளியிடுவதில் பெருமை படுகிறது..!!




