ஜாக்பாட் திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!! 5 வருடத்தில் இவ்வளவு லாபமா?..

மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வருகின்றனர்.  எனவே அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டத்தில் அதிக அளவு இணைகின்றனர்.  இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.  அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் அதிக அளவு வட்டி தொகையை பெற முடிகிறது. அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) முக்கிய பங்கு வகிக்கிறது.

மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மொத்தமாக முதலீடு செய்து வரிச் சலுகைகளுடன் அதிக வருமானத்தைப் பெறலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மற்றும் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை ஒரு அக்கவுண்டில் சேமிக்க முடியும். 5 வருட முதிர்ச்சிக்கு பிறகு இந்தக் கணக்கை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். சேமித்த பணத்தை மாதம் ரூ.20,050/- அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை ரூ.60,150/- பெற்றுக்கொள்ளலாம். அதை பெறாமல் இருந்தால் 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.12 லட்சம் வட்டி கிடைக்கும்.

Read Previous

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க கடைசி 4 நாள் அவகாசம்..!!

Read Next

உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..!! படித்ததில் ரசித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular