கார்த்திகை மாதம் என்றாலே இருள் நீங்கி ஒளி தரும் மாதமாகும். கார்த்திகை மாதம் என்றாலே தீபங்கள் தான் சிறப்பு. ஒவ்வொரு வீட்டிலும் தீபங்கள் ஜொலிக்கும். பொதுவாகவே அனைத்து தமிழ் மாதங்களிலும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. ஆனால் இந்த கார்த்திகை மாதத்திற்கு அதிக சிறப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் தான் பல்வேறு விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. முக்கியமாக தீபத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
கார்த்திகை மாதம் சிவன் முருகன் மற்றும் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான மாதம் என்று கூறுகிறார்கள். இந்த கார்த்திகை சோமாவாரம் மற்றும் கார்த்திகை தீபம் ஆகியவை இந்த மாதத்தில் முக்கியமான நாட்கள். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார பூஜை திருகார்த்திகை தீபம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த மாதத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமையும் சிவபெருமான் ஆலயங்களில் சோமவாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இனி கார்த்திகை மாதம் தொடர்ந்து மார்கழி தை ஆகியவை இந்து மத வழிபாடுகளில் முக்கிய முக்கியமான மாதங்களாக பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் யார் இறைவனை மனமுருகி வேண்டினாலும் அது உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இந்த கார்த்திகை மாதத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை இந்த மாதம் முழுவதும் நீங்கள் கடைப்பிடித்தால் இறைவன் அருளை பெற முடியும்.
அது என்னவென்றால் திருக்கார்த்திகை தீபம் அன்று அனைவர் வீட்டிலும் விளக்கு ஏற்றுவர். ஆனால் இன்றைய தினம் கார்த்திகை மாத பிறந்த முதலே மாலை 6 மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளாக வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு வீட்டின் வாசலில் நிலைக்கு இரண்டு பக்கமும் விளக்குகளை வைக்க வேண்டும். இதை இந்த மாதம் முழுவதுமே நீங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது உங்கள் வீட்டில் இருள் விலகி இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.




