திருமங்கலம் அடுத்து அம்மாபட்டி சச்சியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது…
திருமங்கலம் அருகே அம்மாபட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக சடாட்சியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக பொங்கல் திருவிழா நடைபெறும், விவசாயம் செழிக்கவும் நினைத்த காரியம் கைகூடவும் வேண்டிக் கொண்டு கிராம மக்கள் இங்கு வழிபாடு நடத்துவார்கள் இதன்படி நேற்று முன்தினம் துவங்கிய திருவிழாவிற்காக கிராம மக்கள் விரதம் இருந்து வந்தனர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்களை கோவிலுக்கு அர்ப்பணித்து பலியிட்டனர் ஆடுகளின் ரத்தம் கோவில் உள்ள தொட்டிக்குள் விடப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து அசைவ உணவு சமையல் துவங்கி நேற்று காலை வரையில் நடைபெற்றது பின்னர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது இதில் அம்மா பட்டி, பன்னியகுண்டு, பொக்கம்பட்டி, தங்கலாச்சேரி, காங்கேயநந்தம், சாத்தங்குடி, மீனாட்சிபுரம், திருமங்கலம், உசிலம்பட்டி, தும்மகுண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் இதற்கான ஏற்பாடுகள் அம்மாபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர், இந்த திருவிழா குறித்து அம்மாபட்டி பொதுமக்கள் கூறுகையில் இந்த அம்மன் கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண்ணை வைத்து கிராமத்தில் மற்ற கோவில்கள் கட்டுவதற்கு அம்மன் உத்தரவிடுவார் கிராம மக்களிடம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறும் என்றும் காணிக்கையாக ஆடு வழங்குவோம் என்றும் கூறியுள்ளனர்..!!




