நட்சத்திரங்கள் 27 உள்ளது அவற்றில் எந்த நட்சத்திர ராசி பெற்றவர்கள் எந்த சித்தரை வணங்க வேண்டும் என்று பார்ப்போம்….
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் போகர் சித்திரை வழிபட்டு பலன் அடையலாம் என சித்தருக்கு பழனி முருகன் கோவில் ஜீவசமாதி உள்ளது, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர் அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் வரங்களை வாரி வழங்குவதாக நம்பிக்கை உண்டு 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம் அவர்கள் எங்கு குடி கொண்டு உள்ளார் என்பதை காண்போம்….
27 நட்சத்திரங்களுக்கு உகந்த சித்தர்களையும் அவர்களை வழிபட செல்ல வேண்டிய தளங்களையும் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
அஸ்வினி காலங்கிநாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய கோயில்களில் உள்ளது..
பரணி போகர் சித்தர் இவருக்கு பழனி முருகன் கோவில் தனி சமாதி உள்ளது…
கார்த்திகை ராமரிஷி சித்தர் இவருக்கு ஜீவசமாதி இல்லை காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கூறப்படுகிறது…
ரோகிணி – மச்சமுனி சித்தர் இவரது ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது….
மிருகசீரிடம் – பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர் பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவில் உள்ளது சட்ட முனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது..
திருவாதிரை – இடைக்காடர் இவரது ஜீவசமாதி திருவண்ணாமலை உள்ளது…
புனர்பூசம் – தன்வந்திரி சித்தர் இவரது ஜீவ சமாதி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ளது…
பூசம் – கமலம் முனிவர் இவரது ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது அகத்தியர் சித்தர் இவரது ஒளிவட்டம் குற்றாலம் பொதிகை மலையில் உள்ளது…
மகம் – சிவவாக்கிய சித்தர் இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது…..
பூரம் – ராம்தேவ சித்தர்ஸஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர் மலையில் உள்ளது…
உத்திரம் – காகபுஜண்டர் சித்தர் இவரது ஜீவ சமாதி திருச்சி உறையூரில் உள்ளது…
அஸ்தம் – கருவூரார் சித்தர் இவரது ஜீவ சமாதி கரூரில் உள்ளது இவரது ஒளிவட்டம் வந்து செல்லுமிடம் தஞ்சாவூர் பெரிய கோவிலாகும்…
சித்திரை – புண்ணாக்கிசர் சித்தர் இவரது ஜீவ சமாதி நன்னா சேர் என்ற இடத்தில் உள்ளது….
சுவாதி – புலிப்பாணி சித்தர் இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைக்காவூர் என்ற இடத்தில் உள்ளது…
விசாகம் – நந்தீசர் இவரது ஜீவ சமாதி மாயவரத்திலும் உள்ளது…
அனுஷம் – வால்மீகி சித்தர் இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது…
கோட்டை – பகவான் வியாசருக்கு உரிய நட்சத்திரம் இவரை நினைத்தாலே போதும் அந்த இடம் வருவார் என்பது நம்பிக்கை…
மூலம் – பதஞ்சலி சித்தர் இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது போராட்டம் ராமேதர் சித்தர் இவரது ஒளி அழகு மலையில் காணலாம்…
உத்திராடம் – சித்த வீரன் கொங்கனார் இவர் ஜீவசமாதி திருப்பதியில் உள்ளது..
திருவோணம் – தட்சிணாமூர்த்தி சித்தர் இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளி தென்னல் என்ற இடத்தில் உள்ளது…
அவிட்டம் – திருமூலர் சித்தர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்…
சதயம் – கவ்பாலர் சித்தர் இவரை நினைத்தாலே தேடி வந்து அருள் புரிவதாக ஐதீகம்…
புரட்டாதி – ஜோதிமணி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளார் அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள் பாலிப்பார்…
உத்திராட்டதி – டமரகர் சித்தர் இவரும் நேரடியாக காற்றில் ஐக்கியமாகி கலந்து விட்டார் என்று வரலாறு கூறுகிறது இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்..
ரேவதி – சுந்தர ஆனந்த சித்தர் இவரது ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது…!!!!




