உங்கள் தலை முடி உதிர்கின்றதா இனி கவலை வேண்டாம் அதற்கான காரணத்தையும் தீர்வையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்…
ஷாம்பு பயன்பாடு : சந்தைகளில் கிடைக்கும் ஷாம்புகளில் அதிக அளவு ரசாயனங்கள் கலந்து தான் தயாரிக்கப்படுகிறது இந்த நிலையில் இதனை தலையில் இருக்கும் அழுக்குகளை போக்கும் நோக்கில் அதிகளவு பயன்படுத்துகிறோம். ஆனால் இது தவறு ஷாம்புவை குறைவாக தான் பயன்படுத்த வேண்டும் தினமும் போட்டு குளிக்க கூடாது அப்படி செய்தால் தலைமுடியில் இருக்கும் சத்துக்கள் நீக்கப்பட்டு முடியும் வழுவும் குன்றிவிடும், மேலும் நீச்சல் குளத்தில் குளிக்க செல்பவர்கள் பொதுவாகவே நீச்சல் குளங்களில் இருக்கும் தண்ணீரில் குளோரின் கலக்கப்படும் இது முடியை சேதப்படுத்தக் கூடும் என்பதால் ஷவர் கேப் அணிந்துதான் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் அதேபோல் அதிகளவு சூடாக இருக்கும் தண்ணீரில் குளித்தாலும் முடி உதிர்வது ஏற்படும். அதனால் மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் குளிக்கலாம், பெண்கள் தங்கள் தலை முடியை இறுக்கமாக பின்னவும் கூடாது ஃப்ரீ ஹேர் விட்டாலும் சிக்கல் தான் அதனால் தளர்வான பின்னல் மற்றும் போனி டெயில் போடுவது நல்லது, ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைலில் இருக்காமல் தலை முடியை மாற்றிக் கொள்வது நல்லது இல்லையெனில் முடி சேதம் அடைந்துவிடும், முடி வெட்டுதல் நமது தலைமுடியின் நுனிப்பகுதி சேதம் அடையும் பட்சத்தில் அது வளர்ச்சியை பாதிக்கும் அதனால் சரியான இடைவெளியில் நுனி முடியை வெட்டுவது நல்லது இது முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்யும், மேலும் நரை முடிகளை தேடி பிடுங்குவது நல்லதல்ல, தலைமுடி ஈரமாக இருக்கும் பொழுது தூங்க செல்லாதீர்கள் ஈரமான தலைமுடி எளிதில் உடைய அதிக வாய்ப்பு இருக்கிறது, நீங்கள் பயன்படுத்தும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் அதிலிருந்து பாக்டீரியாக்கள் முடியை சேதப்படுத்தக்கூடும், தலைக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது மென்மையாகவும் முடி பளபளப்பாகவும் இருக்கும் ஆனால் அதனை நீண்ட நேரம் தலைமுடியில் வைத்திருந்தால் பாதிப்பினை ஏற்படுத்தும், உணவுகள் சத்தான மற்றும் சம சீரான உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே நமது தலை முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் முடி உதிர்வதையும் அது தடுக்கும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரோட்டமாக வைத்துக் கொள்வது அவசியம்..!!




