நரை முடியால் அவதிப்பட்டு வரும் உங்களுக்கு இனி கவலை வேண்டாம் நரைமுடிக்கு குட் பாய் சொல்லுங்க…
நரை முடிகளை போக்குவதற்கு ஓமவள்ளி இலைகள் கொண்டு இயற்கையான முறையில் ஹேர் டை பாக்ஸ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம், ரசாயம் சேர்க்காமல் இயற்கை முறையில் உருவாக்குவதால் இதில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை முடி உதிர்வு பிரச்சினைகள் பலருக்கும் இருப்பது போல் நரைமுடிகளும் பலருக்கு இருக்கிறது இதனை போக்குவதற்கு செயற்கையான ஹேர் டைகளை பயன்படுத்துவார்கள் ஆனால் இயற்கை வழியில் ரசாயனம் கலக்காத ஹேர் டைபக் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம், ஓமவள்ளி இலைகள் பெரும்பாலும் சளிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது அத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த இதனை கொண்டு எளிமையாக ஹேர் டைட் பாக்ஸ் செய்யலாம் முதலில் பத்து முதல் 15 ஓமவள்ளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் இவற்றை இடுக்கல்லில் போட்டு நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக ஒரு சொட்டு தண்ணீர் கூட விடக்கூடாது இலைகள் அனைத்தையும் நன்றாக இடித்த பின்னர் அதனை பிழிந்து வடிகட்டி சார் எடுக்க வேண்டும் சுமார் இரண்டு ஸ்பூன் அளவிற்கு இதில் இருந்து சார் கிடைக்கும் அத்துடன் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் அவுரி பொடி 2 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும், இது பசை பக்குவதற்கு வந்ததும் தலையில் நரைமுடிகள் இருக்கும் இடங்களில் தேய்க்க வேண்டும் அவ்வாறு தேய்த்து முடித்ததும் ஒரு மணி நேரம் கழித்து சீவக்காய் போட்டு குளிக்க வேண்டும் வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்..!!




