இனி வீட்டிலிருந்தே சொத்து பட்டாவை மாற்றலாம்..!! விண்ணப்பிக்கும் முறை உள்ளே..!!

விண்ணப்பிக்கும் முறை:

1. முதலில்  பட்டா மாற்ற கூறி  விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.tn.gov.in/வை   பார்வையிடவும்.

2.”பட்டா மாறுதல் விண்ணப்பிக்க” என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

3. உங்கள் மொபைல் நம்பர் கொடுத்தவுடன், உங்கள் மொபைலுக்கு OTP நம்பர் வரும் அதை உள்ளிடவும்.

4. பின்னர், உட்பிரிவு பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்று இரண்டு பிரிவுகள் திரையில் காட்டப்படும். அதில் என்ன உங்களுக்கு தேவையோ அதை கிளிக் செய்யவும்.

5. பட்டா மாற்ற தேவையான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

6.மேலும், செட்டில்மென்ட் பத்திரம், கிரைய பத்திரம், தான பத்திரம், பரிவர்த்தனை பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் உள்ளிட்டவற்றின் ஏதேனும் ஒன்றை 3 MB-க்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

7. மாவட்டம். கிராமம், தாலுகா, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவாளர் அலுவலகம், பரிவர்த்தனை வகை மற்றும் ஆவண பதிவு எண் உள்ளிட்டவற்றின் விவரங்களை உள்ளிட வேண்டும்.

8. விண்ணப்பக் கட்டணமாக ரூ.60-யை செலுத்த சம்மதமா என்று கேட்கும். சம்மதம் என்று கிளிக் செய்து சமர்ப்பிக்கவும். விண்ணப்பம் நிறைவேற்றப்படும் போது உங்கள் மொபைலுக்கு SMS மூலம் தகவல் அனுப்பப்படும்.

Read Previous

ESIC ஆணையத்தில் Junior Resident வேலை..!! நேர்காணல் மட்டுமே..!! மாத ஊதியம்: ரூ.1,00,980/-..!!

Read Next

விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்..!! கட்டாயம் படியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular