பற்கள் சொத்தையால் தினம்தோறும் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம் உங்களுக்கான சிறந்த தீர்வு இதோ…
பல் வலியால் அவதிப்படுபவர்கள் பலரும் உண்டு. பல் பிரச்சனை இருந்தும் பல் டாக்டரிடம் செல்வதில்லை. அதுவே நாளடைவில் வழியாகவோ வீக்கமாகவோ மாறிவிடும், பல் எடுக்க வேண்டி இருக்குமோ என்ற பயமே பல் மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பதற்கு முதல் காரணம், பல் சொத்தைனால் வலி வந்தால் பல் எடுக்க வேண்டும் என்பதில்லை பல் எடுக்காமல் செய்யக்கூடிய பல சிகிச்சை வழிமுறைகளை தற்போது காணலாம், சொத்தையின் அளவைப் பொறுத்து பல் அடைப்பு அல்லது வேர் சிகிச்சை செய்து பற்களை சரி செய்து அதன் மேல் செராமிக் கேப் போட்டுவிட்டால் இயற்கை பற்கள் போலவே மாறிவிடும், முன்பு வேர் சிகிச்சை செய்ய முடியாது என்று சொல்லப்பட்ட பல பற்களுக்கு இன்றைய நவீன சாதனங்களால் எளிதாக வழியின்றி வேறு சிகிச்சை செய்ய முடியும், சொத்தையினாலும் அல்லது அடிப்பட்டோ பற்கள் உடைந்தால் கூட வேர் சிகிச்சை செய்து பற்களை கட்ட முடியும், இருகளை பலப்படுத்தி அதன்மூலம் பற்கள் ஆடாமல் இருக்க செய்வதன் வலுவான பற்களோடு ஆடும் பற்களை இணைத்து அவற்றை பலம் பெற செய்வது போன்ற வழிமுறைகளால் ஆடும் பற்களை சரி செய்ய முடியும் மேலும் பற்கள் வலி இருக்கும் இடத்தில் கிராம்பு வைக்கும் பொழுது பல் வலி குறைந்து உடனடி தீர்வு கிடைக்கும்..!!




