எப்போதும் இட்லி தோசைக்கு வழக்கமான சட்டியை செய்து சாப்பிட்டு சலித்து விட்டதா ஒரு முறை ரோட்டு கடை ஸ்டைலில் இருக்கும் இந்த கார சட்டினி செய்து பாருங்கள் இன்னும் இரண்டு இட்லி எக்ஸ்ட்ரா உள்ள போகும்…
நமது அனைவரது வீட்டிலும் வழக்கமாக செய்யும் இட்டிலி தோசைக்கு வழக்கமான தேங்காய் சட்னி தக்காளி சட்னி செய்து சாப்பிட்டு சலித்து விட்டதா வேறு எந்த சட்டினி செய்தாலும் நேரம் அதிகமாக இருக்கிறதா அப்ப ஒரு முறை 10 நிமிடங்களில் தயாராகும் இந்த ரோட்டு கடை ஸ்டைல் கார சட்னி செய்து பாருங்கள் இந்த கார சட்னிக்கு எத்தனை இட்லி தோசை சாப்பிடுறீங்கனு உங்களுக்கு தெரியாது, தேவையான பொருட்கள் :
* சின்ன வெங்காயம் 10 முதல் 15
* தக்காளி 2
* பெரிய வெங்காயம் ஒன்று
* பூண்டு ஐந்து பல்
* காய்ந்த மிளகாய் ஐந்து
*சீரகம் அரை ஸ்பூன்
* கடுகு அரை ஸ்பூன்
* நல்லெண்ணெய் மூணு டேபிள் ஸ்பூன்
* உப்பு தேவையான அளவு
காரச்சட்னி செய்முறை :
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த வரமிளகாய் சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு நறுக்கி வைத்த தக்காளி நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும் சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் மட்டும் பயன்படுத்தலாம், இந்த பொருட்களில் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும், இப்போது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்த பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும், அடுத்ததாக நாம் மறைத்து வைத்த கலவையை சேர்த்து வதக்கவும் பின்னர் அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக விடவும், ஐந்து நிமிடத்திற்கு பின்னர் என்னை பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்தால் காரசாரமான கார சட்னி தயார் இதை இட்லி தோசை மற்றும் தயிர் சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்..!!




