புரோ கபடி லீக் 2024: புள்ளிப்பட்டியலில் யாருக்கு முதலிடம்?.. முழு விவரம் உள்ளே..!!
புரோ கபடி தொடரின் 11-வது சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை ஆடிய 15 போட்டிகளில் 12 வெற்றியுடன் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 9 வெற்றியுடன் பாட்னா பைரேட்ஸ் அணி 2ம் இடத்திலும், தபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் முறையே 3 மற்றும் 4ம் இடத்திலும் உள்ளன.
மேலும் புனேரி பல்டன் 5 வது இடத்திலும் , ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 6 வது இடத்திலும் உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி 6 வெற்றியுடன் 9 வது இடத்தில் உள்ளது. இன்றைய (டிசம்பர் 3) போட்டியில் பெங்களூரு புல்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் – யு மும்பா அணிகள் மோதுகின்றனர்.




