நீங்கள் குண்டாக இருப்பதால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்களா இனி கவலை வேண்டாம்…
கேக் பாஸ்தா போன்ற பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் எடை அதிகரிக்க நிறைய வாய்ப்பு உள்ளது காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யும் சில தவறான பழக்கங்கள் வழக்கங்கள் உங்கள் உடல் எடையை அதிகரிக்கிறது, பேஸ்ட்ரிகள் சர்க்கரை நிறைந்த தானியங்கள் பதப்படுத்தப்பட்டு உணவுகள் போன்றவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது இது உங்கள் ஆற்றலை குறைத்து உடல் எடையை அதிகரிக்கிறது, உங்கள் காலை உணவில் புரதம் மிக முக்கியமானது உற்சாகமாக காலை உணவிற்கு புரதம் மிகவும் அவசியம் எனவே காலை உணவில் புரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள், வேகமாக சாப்பிடும்போது நீங்கள் அதிகப்படியான உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள். மூளைக்கு வயிறு நிரம்பிய உணர்வு தாமதமாக அனுப்புகிறது இதனால் உடல் எடை அதிகரிக்கும், காலையில் எழுந்ததும் உடல் செயல்பாடுகளை தவிர்ப்பதும் உங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது, சர்க்கரை மற்றும் கிரீம் சேர்த்து காபி குடிப்பது உடலுக்கு நல்லது கிடையாது தேவையற்ற கலோரிகள் சேர்ந்து சர்க்கரையை ஏற்படுத்தும், எழுந்ததும் மொபைல் போனை அதிக நேரம் பார்ப்பது ஆரோக்கியமானது கிடையாது. உட்காத இடத்திலேயே இருந்து கொண்டு மொபைல் போனை அதிக அளவில் பயன்படுத்துவது உடல் எடையை அதிகரிக்க கூடும், புரதம் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த சமசீரான காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள் முட்டை ஓட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்..!!




