பார்ப்பதற்கும் மேட் ஃபார் ஈச் அதர் ஆக தெரியாதவர்கள் அருகில் சென்று பழகினால் ஆகா என்ன ஒரு அன்னியோன்யமான தம்பதி என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு இருப்பார்கள்…
ஏதோ ஒரு கட்டத்தில் அந்த ஆண் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு இருக்கிறார் என்பது தெரியும் போது அந்த மனிதரா இப்படி என்று ஆச்சரியப்பட்டு போகும் மனைவியுடன் நிறைவான திருமண வாழ்க்கையில் இருந்தாலும் சில ஆண்கள் ஏன் இன்னொரு பெண்ணிடம் காதல் பயப்படுகிறார்கள் விளக்கம் தருகிறார் உளவியல் ஆலோசகர் சீனிவாசன் ஜெயராமன்…
மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போதே இன்னொரு பெண் மீது கணவருக்கு ஈர்ப்பு வருகிறது என்றால் அதற்கு முதலில் மற்றும் முக்கியமான காரணம் தாம்பத்திய உறவில் ஆணுக்கு திருப்தி கிடைக்காதது தான் ஏன் திருப்தி கிடைக்கவில்லை என்று பார்த்தால், பல வீடியோக்களை பார்த்துவிட்டு அதில் நடந்ததெல்லாம் தனக்கும் நிகழ வேண்டும் என்று சில ஆண்கள் மனைவியிடம் எதிர்பார்ப்பார். மனைவி அதற்கு மறுக்கும் போது வெளியில் தேட ஆரம்பிப்பார்கள், சில குடும்பங்களில் இவளுக்கு இதெல்லாம் புரியாது என்று மனைவியிடம் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார் கணவர் வீட்டை பார்த்துக் கொள்வது மட்டுமே தன் கடமை என்று இருப்பாள் மனைவி ஒரு காலகட்டத்தில் இந்த இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை குறைந்து போகும் ஸ்வீட் நத்திங் எதுவும் இருக்காது விளைவு இடைவெளி அதிகமாகும் இது திருமண தாண்டிய உறவு தேடலில் முடியும், திருமணத்துக்கு முன்னால் தனக்கு வரப்போகிற மனைவி இந்த நேரத்தில் இந்த உடல் வாக்கில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் அந்த கனவு நிறைவேறாத போது அவனுடைய கனவில் கொஞ்சம் கொஞ்சம் ஒத்துப் போகிற பெண்ணை பார்த்ததும் சரணம் அடைவான் அப்படி ஒரு பெண்ணை பார்க்கவில்லை என்றாலும் மனைவி சின்ன தவறு செய்து விட்டாலும் நான் என்னுடைய விருப்பத்தை எல்லாம் தியாகம் செய்துவிட்டு உன்னை திருமணம் செய்தேனே என்கிற அடிமன உணர்வு மேல் எழுந்து விடும் நன்றாக இருந்த தாம்பத்தியமும் திடீரென தள்ளாடுவதற்கு இந்த உணர்வும் ஒரு காரணமாகும், பெரும்பாலான ஆண்களுக்கு தன்னை மோட்டிவேட் செய்கிற பெண்களை பிடிக்கும் அப்படி ஒரு பெண்ணை வெளியில் சந்திக்கும் போது அவர் மீது ஈர்ப்பு வரலாம். அது ஒரு தலை காதலாகவும் மாறலாம். அதேபோல் வேலையில் தனக்கு வழிகாட்டுகிற பெண்ணையும் சில ஆண்கள் நேசிக்கலாம் இவை பெரும்பாலும் குடும்பத்தை சிதைக்கிற அளவுக்கு போகாது, நாம் எல்லோரும் சிந்து பைரவி படம் பார்த்திருப்போம். அதில் சிவகுமார் இனிமையான இல்லற வாழ்க்கையில் தான் சிலக்சனாவுடன் அனுபவித்துக் கொண்டிருப்பார் ஆனால் தன்னுடைய துறை சார்ந்த அறிவுடன் இருக்கிற சுகாசினுடன் பழகியதும் அவர் மீது காதல் கொள்வார் இந்த வகை ஈர்ப்பு ஒரு நிறைவான தாம்பத்தியத்தை சற்று அசைத்துப் பார்க்கலாம் தவிர ஒரு குடும்பத்தையே அழிக்கும் என்று சொல்ல முடியாது, சீக்கிரம் திருமணம் ஆன ஆண்களில் சிலர் மேரிட் லைப் ரொம்ப போர் அடிக்குது பா என்று சொல்லி கேட்டு இருக்கீங்களா அந்த உணர்வும் ஆணை வேறொரு துணையை தேட வைக்கும், சில மனைவிகள் தன்னுடைய அழகையும் பர்சனாலிட்டியும் சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பார்கள் அழகான கண்கள் இருக்கும் மை தீட்ட மாட்டார்கள் நீளமான விரல்கள் இருக்கும் மெனிக்யூர் செய்து நெயில் பாலிஷ் போடுவது பற்றி பிரக்ஞை இல்லாமல் இருப்பார்கள், தன் மனைவி இப்படியே இல்லையே என்று யோசிக்கலாம் இதனால் ஆண்களுக்கு தனது மனைவியின் மீது இருக்கும் நாட்டம் குறைந்து வெளியில் வேறொரு துணையை தேட தொடங்குவார்கள்…!!




