சமூக வலைதளங்களில் இன்றைக்கு அதிகமாக பேசப்படுவது திருமணத்தை மீறிய உறவு தான்…
ஏன் இப்படியான உறவுகள் தற்போது அதிகரிக்கின்றன என்று யாரும் பெரிதாக பேசுவதில்லை அதை விட்டுவிட்டு புரணி பேசும் வானிலான வார்த்தைகளை அதிகமாக புழங்குகின்றன குறிப்பாக சமூக வலைதளங்களில் இவை பற்றி காணொளிகள் பலரும் அதிக ஆர்வத்துடன் பதிவிடுகின்றனர், சமூகம் பார்ப்பது போல் உறவுகள் எல்லாம் வெறும் பாலுறவு சம்பந்தப்பட்டவை தானா என்றால் முழுக்க முழுக்க உடல் ரீதியான ஈர்ப்பு மட்டுமே என்று சொல்லிவிட முடியாது இன்றைய இயந்திரமான வாழ்வில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பரஸ்பர புரிதலும் அன்பும் எங்கோ ஓரிடத்தில் விடுபட்டு விடுகிறது, அதேவேளை பெண்களும் ஆண்களும் குடும்பத்தில் விட்டு தந்து செல்வதில்லை, ஒரு சில நேரத்தில் இருவருக்குள்ளும் தான் என்ற கர்வம் தலைதூக்குவதனால் அந்த இடத்தில் ஒருவர் மீதான அன்பு மற்றவருக்கு குறைய ஆரம்பிக்கிறது, இதன் மூலம் மூன்றாவது நபர் உள்ளே வர முடிகிறது, அதேபோல் மனைவி எதிர்பார்ப்பதை கணவரும் கணவர் எதிர்பார்ப்பதை மனைவியும் செய்ய முடியாத பட்சத்தில் மூன்றாவது நபர்கள் அதனை மிக எளிமையாக கையாளுகின்றனர், முடிந்தவரை திருமண உறவில் ஆண் பெண் இருவரும் புரிதலோடு அந்த உறவை கொண்டு செல்ல வேண்டும் மன அளவிலும் உடலளவிலும் திருமண பந்தத்தில் பயணித்தால் மட்டுமே அந்த உறவு கடைசி வரை ஆரோக்கியமான பயணமாக இருக்கும், இல்லை என்றால் அந்த உறவில் ஏதோ ஒரு இடத்தில் தேவையற்ற மன கவலைகளும் தேவையற்ற நபர்களும் உள்ளே வரக்கூடும்..!!




