இன்றைய நாள் பெரும்பாலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நரைமுடி..
அந்த வகையில் வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம், தேவையான பொருட்கள் :
* கொய்யா இலை ஐந்து
* சங்குப்பூ 15
* டீத்தூள் 1.1/2 டேபிள்ஸ்பூன்
* செம்பருத்தி பொடி 1.1/2 டேபிள் ஸ்பூன்
* மருதாணி 2 கைப்பிடி
* எலுமிச்சை 1/2
* அவுரி இலை பொடி இரண்டு ஸ்பூன்
தயாரிக்கும் முறை :
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் கொய்யா இலை டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும், பின் இதில் செம்பருத்தி பொடி சங்குப்பூ சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும், அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மருதாணி இலை சேர்த்து அதில் வடிகட்டி வைத்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும், பின்னர் அடுப்பில் இரும்பு வாணல் வைத்து அதில் அரைத்த மருதாணி இலை எலுமிச்சை சேர்த்து கலந்து மூடி போட்டு ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்க வேண்டும் இதற்கு அடுத்து அதில் அவுரி இலை பொடி சேர்த்து கலந்து முடியில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ள வேண்டும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி மறைந்து முடி முழுவதும் கருமையாக மாறும்..!!




