பப்பாளி இலையில் இருக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

பப்பாளி இலையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்..

பப்பாளி பழம் எவ்வாறு நமது சரும ஆரோக்கியம் செரிமான ஆரோக்கியம் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறதோ அதற்கு ஈடாக பப்பாளி இலையிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது செரிமானம் தோல்வியாதிகள் டெங்கு போன்ற அபாயகரமான காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு இது மருந்தாக செயல்படுகிறது, பப்பாளி இலையில் இருக்கும் வைட்டமின் சி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது இதனை நாம் அடிக்கடி உட்கொள்ளும் நிலையில் நமது உடலில் நோய்கள் பாதிப்பு இல்லாமல் நம்மை பாதுகாக்கும் இது ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும் பங்கினை வகிக்கிறது, பப்பாளி இலை ஜூஸ் அல்லது தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் இரைப்பை குடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது புரத செரிமானத்தினை ஊக்குவிப்பதோடு மலச்சிக்கல் வாய்வு தொல்லை அஜீரணம் உள்ளிட்ட கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது, பப்பாளி இலையில் வீக்கத்தை குறைக்கும் பண்புகள் உள்ளது இது மூட்டு பகுதிகளில் ஏற்படும் வலியினை நீக்கி அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் உதவுகிறது, அதேபோல் இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கீழ்வாத நோயை குணப்படுத்து உதவுகிறது, பப்பாளி இலை சாரினை குடித்து வந்தால் ரத்தத்தில் அளவுகள் கணிசமாக அதிகரிக்க துவங்கும் மேலும் இந்த இலைகள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளை குறைப்பதோடு அந்த நோயால் பாதிக்கப்பட்டு வரை குணப்படுத்துகிறது, இதில் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கான பக்கவிளைவுகளும் இருக்கிறது கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் பப்பாளி பழம் மற்றும் அதன் நிலைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள், ஒரு சில நேரங்களில் சிலர் உடல்நிலை பப்பாளி இலைகள் ஒவ்வாமை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது இந்த இலைகளை உட்கொண்ட பின்னர் அரிப்பு, சுவாசத்தில் சிரமம் சொறி போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,எப்படி பப்பாளி பழம் நமது சிரமத்திற்கு நல்லதோ அதேபோல் பப்பாளி இலைகளும் மிகவும் நல்லது. இது சருமத்தில் இருக்கும் வீக்கம் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதோடு சருமத்திற்கு ஒரு தனி பொழிவினை தருகிறது..!!

Read Previous

ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்..!!

Read Next

பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு தரும் 50,000 ரூபாய் ஆதார் கார்டு : டிசி மற்றும் என்னென்ன வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular