பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு தரும் 50,000 ரூபாய் ஆதார் கார்டு : டிசி மற்றும் என்னென்ன வேண்டும்..!!

திருப்பூர் மாவட்டத்தின் முதலமைச்சர் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்டத்தில் முதிர் தொகை பெற வேண்டி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் சேமிப்பு பத்திரத்துடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் ஆதார் கார்டு வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறையின் 35-ல் சமூக வட்ட நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்…

தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான உரிமை அளிக்கப்பட்டு வருகிறது ஏழை குடும்பத்திற்கு சில சரிபார்க்க தக்க நிபந்தனைகளும் ஊக்க தொகையுடன் கூடிய வைப்புத் தொகை 18 வயது முடிவில் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்தத் திட்டத்தின் கீழ் இ சேவை மையத்தில் விண்ணப்பதாரர்களால் விண்ணப்பிக்கப்படுகிறது, விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள் மாவட்ட சமூக நல அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு சரியான விண்ணப்பங்கள் பட்டியலிட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிதி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது, 1992 முதல் 2001 வரை தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழகத்தின் மூலம் நிதி வழங்கப்பட்ட நிதி 2002 முதல் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் கீழ்க்கண்டவாறு வைப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோ பிறந்து குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் குழந்தையின் பெயரை நிலையான வைப்புத் தொகையான ரூபாய் 50,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் ரசீது பின் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது..!!

Read Previous

பப்பாளி இலையில் இருக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

வெற்றியாளர்கள் இந்த மாலை நேர பழக்கங்களை தங்களது பழக்கங்களாக கொண்டிருக்கின்றனர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular