நாம் ஒவ்வொரு நாளும் எப்படி செயல்பட்டோம் என்பது அடுத்த நாளில் வெற்றியை நிர்ணயிக்கிறது..
வெற்றிகரமானவர்கள் தங்கள் நாளை வெறும் 24 மணி நேரமாக கருதாமல் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக மாற்றுவார்கள். அவர்களது வெற்றியின் ரகசியம் அவர்கள் பின்பற்றும் தினசரி வழக்கங்களிலேயே ஒளிந்திருக்கும், குறிப்பாக மாலை நேரம் என்பது அவர்கள் தங்களை மீட்டு எடுத்து அடுத்த நாளை தயார் செய்யும் முக்கியமான நேரமாகும், இந்த பதிவில் வெற்றிகரமான நபர்கள் தங்கள் மாலை நேரத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆழமாக ஆராய்வோம், இவர்களின் பழக்கவழக்கங்கள் எந்த ஒரு நபரின் வாழ்க்கையும் மாற்றும் சக்தி வாய்ந்தவை இந்த பழக்கங்களை நாம் வாழ்வில் இணைத்து கொள்வதன் மூலம் நாம் விரும்பும் வெற்றியை எளிதாக அடைய முடியும்..
வெற்றிகரமான நபர்கள் பின்பற்றும் மாலை நேர பழக்கவழக்கங்கள் : ஸ்மார்ட் போன் லேப்டாப் தொலைக்காட்சி என நம்மை சுற்றித்திரைகள் நிறைந்துள்ளன இவற்றிலிருந்து விலகி புத்தகத்தை எடுத்து படிப்பது இசை கேட்பது அல்லது யோகா செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தையும் மேம்படுத்தும்..
நாள் முழுவதும் நிகழ்ந்த நல்ல விஷயங்களுக்காக நன்றியுணர்வை வெளிப்படுத்துவது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும் இது நேர்மையான எண்ணங்களை வளர்த்து அடுத்த நாளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும்
தூங்குவதற்கு முன் அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என்ற பணிகளின் பட்டியலை தயாரிப்பது நேரத்தை சேமித்து நாள் முழுவதும் உற்பத்தி திறனை அதிகரிக்கும்
தூங்குவதற்கு முன் படுக்கை அறைக்கு அருகில் உள்ள அனைத்து விளக்குகளையும் அனைத்து அமைதியான சூழலை உருவாக்குவது தூக்கத்தை விரைவாக வரவழைக்கும்
புதிய திறன்களை கற்றுக் கொள்வது அல்லது ஒரு புத்தகத்தை படிப்பது மூளையை செயலாக வைத்து புதிய சிந்தனை முறைகளை வளர்க்க உதவும்
குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மனதிற்கு இனிமையான உணர்வை தரும் இது உறவுகளை வலுப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கும்
தியானம் பிரார்த்தனை போன்ற ஆன்மீக செயல்பாடுகள் மனதை அமைதிப்படுத்தி வாழ்க்கை பற்றிய புதிய பார்வையை வழங்கும்..!!




